ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தற்காலிகமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு தற்காலிகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரட்ன நியமிக்கப்பட உள்ளார்.
நிரோசன் பிரேமரட்னவை அதிகாரபூர்வமாக தலைமைப் பதவியில் அமர்த்தும் நிகழ்வு இன்றைய தினம் பத்தரமுல்ல பகுதியில் நடைபெறவுள்ளது.
கட்சியின் பணிகளை சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டியதன் காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரட்னவை தலைமைப் பதவியில் அமர்த்துவதாக முன்னணியின் பிரதி செயலாளர் ஜே.டி.வீ திலகசிறி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.