தொலைந்த லொட்டரிக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஒரே நாளில் மில்லியனரான பெண்

16

அமெரிக்காவில் தொலைத்த லொட்டரி டிக்கெட் திரும்ப கிடைத்ததுடன், பெண்ணொருவர் மில்லியனராக மாறியுள்ளார்.

வெர்ஜீனியா நகரைச் சேர்ந்த இளம்பெண் டியாரா பார்லி (Tierra Barley). இவர் Richmondயின் வடமேற்கே உள்ள Henricoவின் Varina வணிக அங்காடியில் லொட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.

ஆனால், தனது மகளை பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தான் வாங்கிய லொட்டரி டிக்கெட்டை அவர் தொலைத்து விட்டார்.

உடனே அதனை வாங்கிய கடைக்கே சென்று பார்த்தபோது, டிக்கெட்டை அங்கேயே வைத்து விட்டு சென்றது தெரிய வந்தது.

மேலும் அதிர்ஷ்டவசமாக அந்த சீட்டுக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் (ரூ.41.5 லட்சம்) பரிசாக விழுந்துள்ளது. இதன்மூலம் டியாரா ஒரே நாளில் மில்லியனராக மாறியுள்ளார்.

Comments are closed.