திடீரென சமூக வலைதளங்களில் டிரண்ட் ஆகும் எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து.. ஏன் தெரியுமா?

8

வெற்றிகரமான சீரியல்கள் இயக்குவதில் வல்லவரான திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் எதிர்நீச்சல்.

சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் 2024 கடந்த ஜுன் 8ம் தேதி முடிவுக்கு வந்தது.

மொத்தம் 744 எபிசோடுகள் தொடர் ஒளிபரப்பாகி உள்ளது, ஆனால் எதிர்நீச்சல் 1000 எபிசோடை எட்டும் என்று தான் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் அது நடக்காமல் முடிந்துவிட்டது.

திருச்செல்வம் இப்போது அடுத்த சீரியலுக்கான கதை எழுதுவதில் பிஸியாக உள்ளார்.

இந்த எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற வெயிட்டான வில்லன் ரோலில் நடித்து வந்தவர் மாரிமுத்து.

20 வருடங்களாக நடிகராக, இயக்குனராக சினிமா பயணித்தாலும் எதிர்நீச்சல் தொடர் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது, அந்த தொடருக்கு பிறகே அதிக படங்கள் நடிக்க தொடங்கினார்.

ஆனால் வெற்றியை சந்தோஷமாக அனுபவிக்கும் வேலையில் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 2023ம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் பிறந்தநாள் நேற்று (ஜுன் 12) என்பதை நியாபகம் வைத்திருக்கும் ரசிகர்கள் அவரது புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்கள்.

Comments are closed.