ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடிக்க வெளியாகியுள்ள படம் இந்தியன் 2.
அனிருத் இசையமைப்பில் கடந்த ஜுலை 12ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்க வசூலிலும் சாதனை படைக்க தொடங்கியுள்ளது. இப்படம் லஞ்சம் ஊழல் ஆகியவற்றை மையப்படுத்திதான் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள நடிகர் சித்தார்த் படத்திற்காக வாங்கிய சம்பள குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிப்பதற்காக சித்தார்த்திற்கு ரூ. 4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments are closed.