சிம்பிளாக முடிந்த வரலட்சுமியின் நிச்சயதார்த்தம்… திருமணத்திற்கு பக்கா பிளான் போட்ட நடிகை, முழு விவரம்
தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு நாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி.
சிம்பு நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான போடா போடி படம் மூலம் நடிக்க தொடங்கியவர் வரலட்சுமி. அதன்பிறகு கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நிறைய நடித்துள்ளார்.
ஜெயா டிவியில் ஒளிபரப்பான உன்னை அறிந்தால் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளவர் நிறைய வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.
இவ்வருடம் மார்ச் மாதம் இவருக்கும் நிகோலாய் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது, திடீரென அந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் என்ன இவருக்கு திருமணமா என்று ஆச்சரியமாக பார்த்தார்கள்.
தற்போது நடிகை வரலட்சுமியின் திருமண பிளான் குறித்து தகவல் வந்துள்ளது. இவர்களது திருமணம் வெளிநாட்டில் நடக்க இருக்கிறதாம், சென்னையில் மெஹந்தி மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிக்கோலா சச்தேவ்-வரலட்சுமி திருமணம் ஜூலை மாதம் 2ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் திருமணம் தாய்லாந்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Comments are closed.