அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம்: தேர்தலுக்கு முன்னர் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை!

17

இலங்கையில் (Sri Lanka) நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு முன்பதாக 13 ஆவது அரசியலமைப்பு திருத்ததை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய (Karu Jayasuriya) வலியுறுத்தியுள்ளார்.  

முதலில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதோடு சர்ச்சைக்குரிய காணிப் பிரச்சினைக்கு உத்தேச காணி ஆணைக்குழுவின் ஊடாக தாமதமின்றி தீர்வு காணப்பட வேண்டும்.

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக நாட்டில் நிலவும் இன மற்றும் மத அவநம்பிக்கையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

அத்துடன், மாகாண சபைகளுக்கான காவல்துறை அதிகாரங்கள் தொடர்பாக வடக்கில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் வெளிப்படையான மற்றும் நேர்மையான கலந்துரையாடல்களை தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்பதாக அனைத்து மக்களுக்கு இடையிலும் ஒற்றுமையை ஏற்படுத்தி அனைவரையும் ஒன்றிணைப்பது காலத்தின் கட்டாயம்” என அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.