உச்ச நடிகர் என்றாலே அவர்கள் மீது ஏதாவது ஒரு சர்ச்சை வந்துவிடும். அப்படி தான் விஜய் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
விஜய் நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கிறார் போன்ற வதந்திகள் சோசியல் மீடியாவில் உலா வந்துகொண்டு இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் ஏற்பாடு செய்திருந்த கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சோசியல் மீடியாவில் புறணி பேசுகிறார்கள். அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாதீர்கள். நல்லவர்களை கெட்டவர்கள் போலவும், கெட்டவர்களை நல்லவர்கள் போலவும் சித்தரிக்கிறார்கள். சோசியல் மீடியாவில் செய்திகளில் எது உண்மை, எது பொய் என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார்.
Comments are closed.