தங்க,வெள்ளி நூலால் நெய்யப்பட்ட புடவையை வாங்கிய நீதா அம்பானி – அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

16

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்ற நீதா அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு புடவை வாங்குவதற்காக சென்றுள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, எப்போதும் ஆடம்பர வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து வருகிறார்.

நீதா அம்பானிக்கு அரிய மற்றும் அதிக விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதில் அதிக ஆசை உள்ளதாக பல மேடையில் கூறியுள்ளார்.

அந்தவகையில் தற்போது அவருடைய இளைய மகனின் திருமணத்திற்கு முன்னாயத்தங்களை செய்துக் கொண்டு வருகிறார்.

திருமணத்திற்கு முன், அம்பானி குடும்பம் இரண்டு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை நடத்தியது. முதலில், ஜாம்நகரில் ஒரு ஆடம்பரமான மூன்று நாள் நிகழ்வு, அதைத் தொடர்ந்து மத்திய தரைக்கடல் வழியாக ஒரு ஆடம்பரமான கப்பல் பயணம்.

அவர்களின் திருமண அழைப்பிதழ் தற்போது அனைவரது கவனத்தை ஈர்த்தது.

அதற்காக திருமணத்திற்கு முன்னதாக ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் சிவபெருமானுக்கு அழைப்பிதழ் வழங்க வாரணாசிக்கு விஜயம் செய்து, பின் புடவை வாங்குவதற்கும் சென்றுள்ளார்.

நீதா அம்பானி தனிப்பட்ட முறையில் புடவைகளை மதிப்பாய்வு செய்து, தங்கம் மற்றும் வெள்ளி நூல்களால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு இலட்சம் புட்டி புடவையைத் தேர்ந்தெடுத்தார்

பின் அதை அவர் 1,80,000 ரூபாய்க்கு வாங்கியும் இருக்கிறார்.

புடவை வியாபாரி அம்ரேஷ் குஷ்வாஹா கூறுகையில், “நீதா அம்பானியின் குழு என்னைத் தொடர்பு கொண்டது, அதனால் நான் ஹோட்டலுக்கு 60 புடவைகளை கொண்டு வந்தேன். நள்ளிரவில், நீதா அம்பானி தனிப்பட்ட முறையில் அனைத்து புடவைகளையும் பார்த்து ங்கம் மற்றும் வெள்ளி நூல்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு லட்சம் புட்டி புடவையை விரும்பி எடுத்தார்.

வெள்ளி நூல்களால் பட்டுத் துணியில் நெய்யப்பட்டு தங்கத்தால் முடிக்கப்பட்ட புடவையை தயாரிப்பதற்கு 60 முதல் 62 நாட்கள் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஜூலை 12 ஆம் தேதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் திருமணம் செய்ய உள்ளனர். இந்து முறைப்படி நடைபெறும் திருமணம் மூன்று நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.