இஸ்ரேலுக்கு பெரும் தொகுதி ஆயுதங்களை வழங்குவதற்கான அவசர அறிவிப்பு ஒன்றை அமெரிக்கா கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதகள். அதுவும் காசாவின் ரப்பா மீது இஸ்ரேல் படைநடவடிக்கையை அறிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கான ஆயத உதவியை நிறுத்திவைப்பதாக ஜோ.பைடன் அறிவித்தல் விடுத்து வெறும் இரண்டே நாட்களில், இந்த புதிய ஆயுத உதவி பற்றிய அறிவிப்பு வெளியாகியிருந்தது.
ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் இஸ்ரேலுக்கு 26 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிகமாக இந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆயுத விநியோகம் தற்பொழுது அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எதற்காக இத்தனை ஆயுதங்களை அவசர அவசரமாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்புகின்றது?
அமெரிக்காவின் இந்த ஒரு பில்லியன் ஆயுத உதவி பற்றிய அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, எதற்காக இஸ்ரேலுக்கான ஆயுத வினியோகத்தை நிறுத்துவதாக அறிவித்திருந்தது அமெரிக்கா?
மிகப் பெரிய நிதி நெருக்கடியில் இருக்கின்ற அமெரிக்கா எதற்காகப் பாரிய நிதி ஒதுக்கீடுகளை இஸ்ரேலுக்கு செய்துவருகின்றது?
Comments are closed.