உக்ரைனின் மேற்குப் பகுதியில் உக்ரைன் இராணுவ நடவடிக்கைகள் குறித்த தகவல்களைச் சேகரித்து வந்த ஹங்கேரிய உளவு வளையத்தை கண்டுபிடித்ததாக உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைனின் டிரான்ஸ்கார்பதியா பிராந்தியத்தில் வான் மற்றும் தரை பாதுகாப்பு பாதிப்புகள் மற்றும் ஹங்கேரியின் சாத்தியமான படையெடுப்பு குறித்த உள்ளூர் தகவல்களை இந்த அமைப்பு சேகரித்து வருவதாக உக்ரைன் அறிக்கை தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் சட்ட நடைமுறையாக்க நடவடிக்கைகளின் அளவை நிறுவுவதற்கும், அத்தகைய பிரிவுகள் எவ்வாறானது என்பதை மதிப்பிடுவதற்கும் உளவாளிகள் பணிக்கப்பட்டனர் என்று உக்ரைன் கூறியுள்ளது.
உக்ரைனின் அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, ஹங்கேரிய வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜ்ஜார்டோ இரண்டு உக்ரேனிய தூதர்களை வெளியேற்றியதாக கூறியுள்ளார்.
அவர்கள் தூதரக மறைவின் கீழ் உளவு பார்த்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹங்கேரியர்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களை அந்நாடு பொறுத்துக்கொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் உக்ரைனிடமிருந்து ஹங்கேரி எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் பெறவில்லை என்றும் சிஜ்ஜார்டோ கூறியுள்ளார்.