இந்தியாவில் 8000 எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்

0 3

இந்தியாவில் (India) 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒப்பரேசன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தான் – இந்தியா இடையே நேரடி தாக்குதல்கள் தொடங்கியுள்ள நிலையில் எக்ஸ் தளத்துக்கு இந்திய மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் ஊடக அமைப்புகளின் சமூக ஊடக கணக்குகளை குறிவைத்து இந்தியா மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் நிறுவனம் கூறியதாவது, இந்திய அரசின் நிர்வாக உத்தரவினை ஏற்று இந்தியாவில் உள்ள 8000 எக்ஸ் வலைத்தள கணக்குகளை முடக்கும் பணியில் ஈடுபட்டுளோம்.

ஆனால், இந்திய அரசின் கோரிக்கைகள் மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை.

இந்த தடை உத்தரவுகளால் பாதிக்கப்படும் அனைத்து பயனர்களும் நீதிமன்றங்களிலிருந்து தகுந்த நிவாரணம் பெற நாங்கள் ஊக்குவிக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.