முதல் சம்பளம் ரூ 500, இப்போ ஒரு படத்திற்கு 4 கோடி!! அந்த பிரபல நடிகை யார் தெரியுமா?

18


தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கும் நடிகை தான் சமந்தா.

கடைசியாக சமந்தா நடிப்பில் வெளிவந்த குஷி திரைப்படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. மீண்டும் சமந்தா சினிமாவில் நல்ல கம்பேக் கொடுப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தா, தனது முதல் சம்பளம் குறித்து பேசியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, “நான் ஹோட்டலில் வேலை செய்தேன் அப்போது ஒரு நாளைக்கு ரூ 500 கிடைக்கும் அது என்னுடைய முதல் வருமானம்” என்று கூறியிருந்தார்.

இப்படி ரூ. 500 சம்பளத்தில் தொடங்கி தற்போது அதிக சம்பளம் பெறும் நடிகைகளுல் ஒருவராக சமந்தா உயர்ந்துள்ளார். இவர் ஒரு திரைப்படத்திற்கு ரூபாய் 4 கோடி வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது.

Comments are closed.