விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் கோபி மற்றும் ராதிகா உடன் அவரது அம்மா ஈஸ்வரியும் அவர்கள் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
அங்கு மயங்கி விழும் ஈஸ்வரி தனக்கு சாப்பாடு கொடுக்கவில்லை என கோபியிடம் புகார் சொல்கிறார்.
தன்னை சாப்பாடு போடாமல் கொடுமைப்படுத்துகிறார்கள், தட்டை பிடிங்கிவிட்டார்கள் எனவும் பொய் புகார் சொல்கிறார். அதனால் கோபி ராதிகா மற்றும் அவரது அம்மாவை திட்டிவிட்டு போகிறார்.
இந்நிலையில் அடுத்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஈஸ்வரிக்கே வில்லியாக ராதிகாவின் அம்மா மாறுகிறார்.
காபி கப்பை அவரே தள்ளிவிட்டுவிட்டு அதன் பின் ஈஸ்வரி தான் காபி பிடிக்காமல் கொட்டிவிட்டார் என நடிக்கிறார்.
இதனால் வரும் சண்டைக்கு நடுவில் மாட்டிக்கொண்டு கோபி தான் என்ன செய்வது என தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்.
Comments are closed.