எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் மே மாதம் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் மே மாதம் 07ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி அன்று உரிய கிராம அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வாக்களிப்பு நிலைய நடவடிக்கைகளுக்குத் தேவையான மேசை, நாற்காலிகள் மற்றும் மண்டப வசதிகளை வழங்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.