விகாரை அரசியலில் ஈடுபட்டுள்ள அநுர: விமர்சித்த பேராசிரியர்

12

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விகாரை அரசியலில் ஈடுபட்டுள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி குற்றம் சுமத்தியுள்ளார்.

வயது முதிர்ந்தவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள விகாரை அரசியலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிறந்த முறையில் கையாண்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தற்போதைய ஜனாதிபதி அநுரவும், வாக்குகளைப் பெற்றுக்கொள்ள விகாரை அரசியலை பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் சமூக விஞ்ஞான அடிப்படையில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தியானம் மேற்கொள்ளக்கூடிய ஆன்மீக நெறிகளை அவர்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இவர்களை அரசியல் ரீதியாக கவர்ந்திழுப்பது சுலபமான காரியமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசியலை சிறந்த முறையில் முன்னெடுத்தவர்களாக ராஜபக்சக்களை குறிப்பிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகையின் புனிதப்பொருள் கண்காட்சியும் இவ்வாறு வயது முதிர்ந்தவர்களை அரசியல் ரீதியாக ஈர்க்கும் ஓர் விகாரை அரசியலாக நோக்கப்பட வேண்டுமென பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி குற்றம் சுமத்தியுள்ளார்.

Comments are closed.