உலகளாவிய ரீதியில் அந்தஸ்தை இழக்கும் டொலர்

0 7

உலகளாவிய இருப்பு நாணயமாக உள்ள அமெரிக்க டொலரின் அந்தஸ்து தேய்வடையும் வாய்ப்புள்ளதாக பிம்கோவின்(PIMCO) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மொஹமட் எல்-எரியன்(Mohamed El-Erian) தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், அமெரிக்க அரசாங்கப் பத்திரங்கள் விற்கப்பட்டமை மிகவும் அசாதாரணமானது என அவர் தெரிவித்துள்ளார்.

சிக்கலான காலங்களில் கூட பாதுகாப்பான முதலீடாக உலகம் முழுவதும் டொலர் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், அசாதாரணமான முடிவுகள் எடுக்கப்பட்டால் உலகளாவிய ரீதியில் இருப்பு நாணயமாக உள்ள டொலர் அதன் செல்வாக்கை இழக்கும் வாய்ப்புள்ளதாக மொஹமட் எல்-எரியன் தெரிவித்துள்ளார்.

தீர்மானங்கள் பொறுப்புடன் மேற்கொள்ளப்படவில்லை என்றால், ஏனைய நாடுகள் டொலரை இருப்பு நாணயம் என்ற தகுதியில் இருந்து திரும்பப்பெறும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.