பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கம் செய்வதற்கான குழுவை நியமிக்கும் முன்மொழிவு இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
151 பெரும்பான்மை வாக்குகளால் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 151 வாக்குகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், எதிராக எவ்வித வாக்குகளும் அளிக்கப்படவில்லை.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான குழுவொன்றை நியமிக்கும் யோசனை நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.