வர்த்தகப் போர் ஆரம்பம் – ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

0 7

அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் மூலமும், அமெரிக்காவிற்கு எதிராக சீனாவின் பழிவாங்கும் வரிகள் மூலமும் வர்த்தகப் போர் ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விகிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

முக்கிய பொருளாதார சக்திகள் ஒன்றுக்கொன்று சவால் விடுவது நிச்சயமற்ற காலத்திற்கு வழிவகுக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பொருளாதார சரிவில் அதிகம் பாதிக்கப்படுவது இலங்கை போன்ற சிறிய நாடுகளாகும்.

ஒன்று அல்லது இரண்டு பொருட்களை ஏற்றுமதி செய்யும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுக்கு அமெரிக்கா முக்கிய சந்தையாக உள்ளது.

பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், ஏப்ரல் 2 ஆம் திகதிக்கு முன்பு இருந்த நிலைக்கு வரிகள் திரும்பாது. இது இலங்கையின் ஏற்றுமதிகளை தடுக்கும்.

இதன் விளைவாக தொழிற்சாலை மூடல்கள் மற்றும் பெரிய அளவிலான வேலை இழப்புகள் ஏற்படும்.

இந்திய சந்தையை அணுகுவதற்கு இந்தியாவுடனான ECTA பேச்சுவார்த்தைகளை 3 மாதங்களுக்குள் முடிக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

மேலும் தாய்லாந்து – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.