ஜே.வி.பி கட்சியானது இந்திய விரிவாக்கத்திற்கு எதிரானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி கட்சியானது, அதன் தலைமுறையைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் உள்நாட்டு கலவரங்களில் தங்கள் உயிரைத் தாய்நாட்டிற்காக தியாகம் செய்தனர் என்று கூறுவது பொய்யானது எனவும் அவர் கடுமையான சாடியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“கட்சியின் முட்டாள்தனமான செயல்களால், ஜே.வி.பியின் இளம் திறமைசாலிகள் குழு முன்னதாக அகால மரணம் அடைந்தனர்.
இவ்வாறு பேரழிவைச் செய்த ஒரு குழு நாட்டை மீண்டும் ஒரு போர் மோதலுக்கு இழுக்கும் முயற்சியை நாம் கடுமையாக எதிர்க்கவேண்டும்.
இலங்கை எந்த நாட்டுடனும் பாதுகாப்பு கூட்டணிகளில் ஈடுபடக்கூடாது.
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள நாட்டின் இறையாண்மையைக் காட்டிக் கொடுக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அதை எதிர்த்து நிற்க வேண்டும்.
இந்தியாவின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. எனினும், ஒத்துழைப்பு என்றால் என்ன என்பது தற்போதைய அரசாங்கத்துக்கு தெளிவாகத் தெரியவில்லை.
இலங்கை அரசாங்கம் ஒரு சர்வதேச நடுநிலை நிறுவனத்தின் உதவியுடன் இதைச் செய்ய வேண்டும்.
சம்பூர் மின் உற்பத்தி நிலையம் பற்றி இருபது ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது.
தற்போதைய அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நிராகரித்து நிலக்கரி மற்றும் எண்ணெயிலிருந்து மின்சாரம் தயாரிக்க முயற்சிப்பது நகைப்புக்குரியது.
ஆசிய வங்கியின் உதவியுடன் தெற்காசியாவில் ஒரு மின் கட்டமைப்பு அமைப்பை உருவாக்கத் திட்டங்கள் உள்ளன.
அது இந்திய நிறுவனங்களின் உதவியுடன் செய்யப்பட்டால், இலங்கை பங்களாதேஷைபோலவே பாதிக்கப்படக்கூடும்.
இந்தியாவுடன் முறையான திறந்த வர்த்தகம், எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப செயல்முறைக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றும்.
ஆனால் பாதுகாப்புத் தரப்பிலிருந்து நாட்டின் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.