முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் மூன்று பேரின் பெயர்களில் 4 சொகுசு BMW கார்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் தற்காலிகமாக வரி இல்லாமல் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட காலக்கட்டத்தில் இந்த 4 சொகுசு கார்களும் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
2023 மே 01 முதல் செப்டம்பர் (15) வரை, யோஷித, சானுகா உபேந்திர, அயந்தி பண்டாரநாயக்க ஆகியோரின் பெயர்கள் மற்றும் முகவரிகளுக்கு இந்த கார்கள் வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
30 செப்டம்பர் 2024 வரை நாட்டிற்கு 921 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், தற்போது ஆடம்பர வாகன வரி விலக்கு வரம்பு 6 மில்லியனில் இருந்து 12 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அரசாங்கம் 242 கோடி ரூபாய் வருமானத்தை இழந்துள்ளததகவும் கூறப்படுகிறது.