கொழும்பில் மோடிக்காக திரையிடப்பட்ட சுந்தரகாண்ட நாடகம்

0 5

இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்தியப் பிரதமருக்கு, ராமாயண இலக்கியத்தின் சுந்தர காண்டத்தில் உள்ள சில பகுதிகளை எடுத்துக்காட்டும் ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சி நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தான் கருத்து வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி,

‘சுந்தர காண்டத்தின் சில பகுதிகளை எடுத்துக்காட்டும் ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சியின் காட்சிகளை கண்டுகளித்தேன்.

இதனை ஏற்பாடு செய்த பொம்மலாட்ட சங்கத்தினருக்கும், அவர்களின் ஆர்வத்திற்கும் வீரியத்திற்கும் எனது பாராட்டுகள்.

அத்தோடு கொழும்பில் தன்னை வரவேற்ற இந்திய சமூகத்தினரின் அற்புதமான வரவேற்புக்கு மழை எந்தத் தடையாகவும் இருக்கவில்லை.

அவர்களின் அரவணைப்பு மற்றும் உற்சாகத்தால் நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன் அவர்களுக்கும் நன்றி” என கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர நரேந்திர மோடி தனது இலங்கை பயணத்தின் போது கொழும்பில் உள்ள ஹோட்டலில் தங்கியிருக்கும் நிலையில், அங்கு வந்தடைந்த இந்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் இந்திய சமூகத்தினரிடமிருந்து அவருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியை இந்திய புலம்பெயர்ந்தோர் வரவேற்றனர். பிரதமர் மோடியின் இலங்கை வருகை குறித்து இந்தியக் கொடிகளை ஏந்திய மக்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

அவர் ஹோட்டலில் இந்திய புலம்பெயர்ந்த உறுப்பினர்களுடன் கைகுலுக்கி உரையாடுவதைக் காண முடிந்தது.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று கொழும்பை வந்டைந்தார்.

இந்தப் பயணத்தின் போது, ​​அவர் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து, “பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான கூட்டாண்மைகளை வளர்ப்பது” என்ற கூட்டுத் தொலைநோக்குப் பார்வையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, தொழிலாளர் மற்றும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் அனில் ஜெயந்த, கடற்றொழிழ் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிர்ஷாந்த அபேசேனா ஆகியோர் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

கொழும்பில் தரையிறங்கிவிட்டேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு நன்றி என்பதை மோடி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டார்.

இந்தப் பயணத்தின் போது, ​​இந்தியாவின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அனுராதபுரத்திற்குச் செல்லவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.