பென்குயின்கள் தீவுக்கும் வரி விதித்த ட்ரம்ப்!

0 1

சர்வதேச பொருளாதாரத்தில் சரிவு நிலை ஏற்படும் என்ற அச்சநிலைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரி விபரங்கள் தோற்றுவித்துள்ளன.

அமெரிக்காவின் பெரும்பாலான வர்த்தக பங்காளிகள் மீது தொலைநோக்கு வரிகளை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பென்குயின்கள் மாத்திரம் வசிக்கும் அண்டார்டிக் தீவுக் கூட்டத்துக்கும் – துருவ கரடிகளுக்கு பெயர் பெற்ற ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு நோர்வே தீவுக்கூட்டத்திற்கும் ட்ரம்ப் வரிகளை அறிவித்துள்ளார்.

இதனை பொருளியலாளர்கள் ட்ரம்பின் வரிவிலக்கு பென்குயின்கள் மீதும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக விமர்சித்துள்ளனர்.

மேலும், இந்த வரிவிதிப்பு தொடர்பில் கேள்விகள் வலுப்பெற்றுள்ளன.

ட்ரம்பின் திட்டத்தின் கீழ் இறக்குமதி வரிகளை எதிர்கொள்ளும் இடங்களின் பட்டியலில் அவுஸ்திரேலிய ஹியர்ட் தீவு மற்றும் மெக்டொனால்ட் தீவுகள் இடம் பெற்றுள்ளன.

இதன்பிறகு, அதற்கான தேடல்கள் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.

அமெரிக்காவின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, குறித்த தீவுகள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படவில்லை என்றும் கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் பூஜ்ஜிய வர்த்தகத்தைக் கொண்டிருந்தன என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவால் வரி விதிக்கப்பட்ட மக்கள் வசிக்காத தீவான நோர்போக் பகுதியின் முக்கிய ஏற்றுமதிகள் என்ன, அது ஏன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பில் கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

எனினும் இந்த தீவுகளுக்கு ஏன் வரிகள் விதிக்கப்படுகின்றன என்பது குறித்த கருத்துக்கான கோரிக்கைக்கு வெள்ளை மாளிகை இதுவரை பதிலளிக்கவில்லை.

அத்தோடு ஹார்ட் மற்றும் மெக்டொனால்ட் தீவு குழுவில் மனிதர்கள் தற்போது வசிக்கவில்லை. இதனால் இதனை யுனெஸ்கோ “உலகின் அரிய அழகிய தீவு சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்று” என்று வர்ணித்து 1997 இல் உலக பாரம்பரிய தளமாக நியமித்தது.

அதன் முக்கியமாக பறக்கும் பறவைகள், பெங்குவின் மற்றும் சீல்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அங்கும் ட்ரம்பின் வரி வரம்பு நிலைகொண்டுள்ளது.

ட்ரம்ப் கட்டணங்களை கணக்கிட்ட விதம் அர்த்தமற்றது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையிலேயே மனிதர்கள் வசிக்காத இவ்வாறான தீவுகளுக்கும் ட்ரம்ப் நிர்வாகம் வரிகளை அறிவித்துள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்தோடு இது தொடர்பான தேடல்களையும் மக்கள் அதிகரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.