10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் நேற்றையதினம் (03) மாலை 7.30 மணியளவில் சென்னையில் இருந்து காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.
400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு “Royal madras yacht club” அங்கத்தவர்களால் சென்னையில். ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில், இன்று மீண்டும். நாகப்பட்டினம் செல்லவுள்ள இப்படகு பின்னர் பூம்புகாரை அடைந்து அங்கிருந்து பாண்டிச்சேரியை சென்றடைந்து அங்கிருந்து கோவளத்தினையும் இறுதியில் மீண்டும் சென்னையிலும் நிறைவடையவுள்ளது.
பயணிகளை வரவேற்கும் நிகழ்வில் வடமாகாண ஆளுனர் நா.வேதநாயகன், வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள், துறைமுக அதிகாரசபை அதிகாரிகள், சுற்றுலா துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.