மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகும் ட்ரம்ப்

0 5

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற விருப்பத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த விடயத்தை அவர் ஏற்கனவே சர்வதேச ஊடகமொன்றில் தெரிவித்திருந்தார்.

தற்போது, தான் அதனை நகைச்சுவையாக கூறவில்லை என்ற விடயத்தை ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக வர முடியும் என்ற வரம்பைத் தவிர்ப்பதற்கு முறைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், நிறைய அமெரிக்கர்கள் தான் மூன்றாவது முறையாகவும் பதவியேற்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது கவனம் முழுவதையும் நடப்பு விடயங்களில் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.