உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றி! கனேடிய நீதிமன்றின் வரலாற்று தீர்ப்பு

0 4

தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் எனப்படும் சட்டமூலம் 104 க்கு எதிராக தொடரப்பட்ட மேன்முறையீடு, கனேடிய உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பானது கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் துணை அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான வாரம் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரமாக ஒன்ராறியோவில் தொடர்ந்து அங்கீகரிக்கப்படுவதை இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு உறுதி செய்கிறது என கூறியுள்ளார்.

இதேவேளை இந்த நோக்கத்திற்காக விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியவர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டமூலம் 104 எனப்படும் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வார சட்டமூலத்தை ஒன்ராறியோ மாகாணத்தின் துணை அமைச்சர் விஜய் தணிகாசலம் அறிமுகம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.