வடக்கிற்கான அபிவிருத்தி நிதி: அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து

0 4

வடக்கில் அபிவிருத்திக்கு கிடைக்கும் நிதியில் ஒரு சதம் கூட பயன்படுத்தப்படாமல் திரும்பி செல்லகூடாது என கடற்தொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் வரவு – செலவு திட்டத்தில் அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளது. வடக்கில் அபிவிருத்திக்கு கிடைக்கும் நிதியில் ஒரு சதம் கூட பயன்படுத்தப்படாமல் திரும்பி செல்லகூடாது என்பதுடன் அபிவிருத்தி வேலைகளும் சரியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற அளவுக்கு அதிகமான மதுபான சாலைகள் தொடர்பில் தொடர்ந்தும் மக்களால் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே இவற்றை பொருத்தமான இடத்துக்கு மாற்றுவது அல்லது தொடர்பாகவும ஆராய்ந்து வருகின்றோம்.

குறிப்பாக இங்கே நடக்கின்ற எந்த ஒரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை. ஊழலுக்கும் இடை இடமளிக்கப் போவதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.