சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் வழங்கிய தகவல்களால், விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீதிமன்றத்தால் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், தான் தலைமறைவாக இருந்த காலத்தில் நடந்த சில தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் தனக்கு நினைவில் இல்லை என்று பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சிறைச்சாலைக்கு சென்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“நான் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏரி கிரிவுல்ல வீட்டிற்கு சென்றேன். முன்னால் கதவு மூடப்பட்டிருந்தது. இதனால் மதில் மீது ஏறி ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்தேன்.
இத்தனை காலமும் நான் கிரிவுல்ல வீட்டில் இருந்தேன். சாப்பிடுவதற்காக அங்கும் இங்கும் சென்றேன். கடையில் தான் உணவு பெற்றேன். இதன் போதே எனக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது குறித்து நான் அறிந்தேன்.
அறிந்தவுடன் எனது ஆடைகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் மாத்தறைக்கு வந்தேன். மாத்தறையில் தங்க இடமிருக்கவில்லை. ஹோட்டல் ஒன்றிலேயே தங்கியிருந்தேன்.
அடுத்த நாள் நன்றாக ஆடை அணிந்துக் கொண்டு மாத்தறை நீதிமன்றத்திற்கு வந்து அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டேன்.
நான் ஹோக்கந்தரயில் இருந்து கிரிவுல சென்று தங்கிருந்த காலப்பகுதியில் நடந்தவை எதுவும் எனக்கு நினைவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.