தேசபந்துவை நீக்க அனுரவுக்கு உதவும் சஜித்..!

0 5

பொலிஸ் அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க அரசாங்கம் கொண்டு வந்த பிரேரணையை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கும் என்று, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்று நாடாளுமன்ற உறுப்பினர் பெரேரா கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொலிஸ் அதிபராக தென்னகோனின் பெயரை பரிந்துரைத்த போது, தமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிமும் ஆட்சேபனையை தெரிவித்தனர்.

அவரது தவறான நடத்தை காரணமாக அவர்கள் அவரை எதிர்த்தனர். எனவே அவர் மீதான தங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை என்று அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.