கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தவர்களே இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
களுத்துறை பிரதேசத்தில் நேற்று(24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,” இந்த அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு விடயத்தையும் தற்போது இன்னொரு விடயத்தையும் கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தவர்களே இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கின்றனர்.
கடந்த தேர்தல்களில் பொதுஜன பெரமுன வேட்பாளர்களை களமிறக்கவில்லை. ஆனால் இம்முறை அவ்வாறல்ல. அவர்களது வாக்குகள் மீண்டும் அவர்களுக்கே கிடைக்கப் பெறும்.
அந்த வகையில் இம்முறை பொதுஜன பெரமுன சுமார் 15 சதவீத வாக்குகளையேனும் பெற்றுக் கொண்டால், தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் அது குறைவடையும்.
அதேவேளை எமது வாக்குகளில் ஒன்று கூட பொதுஜன பெரமுனவுக்கு கிடைக்காது. அந்த வகையில் நாம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு சிறப்பாக தயாராகி வருகின்றோம்.
ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை விட இம்முறை தேர்தலில் சிறந்த வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”என கூறியுள்ளார்.