இலங்கையில் வாகன விலைகளில் மாற்றமா..! ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் வெளிப்படுத்தும் தகவல்

0 7

வாகன இறக்குமதியின் போது இந்த ஆண்டு எந்தவித வரி திருத்தங்களும் செய்யப்படாது என ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, சந்தையில் வாகனங்களின் விலைகளிலும் இந்த ஆண்டு எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது, இந்த வருடம் சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்யவுள்ளதாக முன்னறிவிப்பு இருப்பதாக நாங்கள் நினைத்தோம். அதன் மூலம் எதிர்பார்க்கப்படும் ரூபா வருமானம் எவ்வளவு என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு அவர் பதிலளிக்கையில், நாங்கள் எதிர்பார்ப்பது 300 முதல் 350 பில்லியன் வரை. நமது பொருளாதார வளர்ச்சியுடன், இப்போது நாம் ‘காத்திருந்து பார்’ என்று சொல்கிறோம். ஒரு வாகனத்தை இப்போதே ஆர்டர் செய்யலாமா அல்லது பின்னர் ஆர்டர் செய்யலாமா என்று பார்க்கிறோம்.

சிலர் வரி குறையும் என்று எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இந்த ஆண்டு அது குறையாது. நமது IMF ஒப்பந்தத்தைப் பார்த்தீர்கள்தானே. அதில் இந்த ஆண்டு வாகன வரிகளைக் குறைக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.