தேசப்பந்துவின் பிடி அநுரவின் கைகளில்

0 5

தேசபந்துவை பதவி நீக்கி, பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது பல மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு, தண்டனையளிக்கப்பட்டுள்ளன.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாடாளுமன்றத்துக்கு ஒரு விசேட பிரேரணையை கொண்டு வந்தால் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம்.

இவரது நியமனத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தேசபந்துவை பதவி நீக்கி, பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

நாட்டின் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்த நிலையில் உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 28 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், அதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 18 சம்பவங்கள் ஒழுங்கமைக்கபபட்ட பாதாளக்குழுக்களின் செயற்பாடு என்று பொலிஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.