தையிட்டியில் உரிமை போராட்டம்! இனவாதம் என்கிறார் சரத் வீரசேகர

0 5

தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விகாரையில் நேற்று முன்தினம் புதிதாக ஒரு விகாரைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது 29 பௌத்த பிக்குகள் பூஜை வழிபாட்டில் கலந்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு மதிய உணவு வழங்கலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகிய நிலையில் காலை 07 மணியளவில் நேற்று முன்தினம் திஸ்ஸ விகாரையின் முன்பாக தமிழ் மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு கூடியிருந்த இராணுவத்தினர் உடனடியாக விகாரையின் வளாகத்தில் இருந்து வெளியேறினர்.

தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் அவ்விடயத்தை விட்டு வெளியேறுமாறு இராணுவத்துக்கு கட்டளை பிறப்பித்தது யார்?,

ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர், பாதுகாப்ப அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு மாத்திரமே அதிகாரம் உண்டு.

ஆகவே இதன் உண்மைத் தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.