களுத்துறையில் வீட்டின் சுவரில் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாதுவ, மொரோந்துடுவ பகுதியை சேர்ந்த பிரசாதினி பிரியங்கிகா என்ற 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளம் பெண் நேற்று மதியம் தனது காதலனின் வீட்டிற்கு சென்றபோது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.