அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும் வெளியான முக்கிய அறிவிப்பு

0 2

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில், நாட்டின் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினத்தின் இயக்குநர் எம். எஸ். சமி.நவாஸின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா தொழுகையை பிற்பகல் 1.00 மணிக்கு முடிக்குமாறும் திணைக்களம் நாட்டில் அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும் அறிவித்துள்ளது.

இதேவேளை, பரீட்சை நிலையங்களுக்கு அருகில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களில் பகல் நேரத்தில் வெளிப்புற ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அவற்றை உட்புறங்களில் மட்டுமே பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் அறிவிப்பின்படி, 17.03.2025 முதல் 26.03.2025 வரை நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் குறித்த செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.