போர்நிறுத்த நீட்டிப்பை ஹமாஸ் ஏற்க மறுத்ததையடுத்து, காசாவுக்குள் செல்லவிருந்த அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தடுத்துள்ளது.
எகிப்து, கட்டார், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைமையில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், கடந்த சனிக்கிழமை(01.03.2025) காலாவதியானது.
இதனையடுத்து, போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் அமெரிக்காவின் திட்டத்திற்கு ஹமாஸ் இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், ஹமாஸ் சம்மதிக்கும் வரை காசாவுக்குள் அனுப்பப்படும் உதவிகள் நிறுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
ஹமாஸ் இந்த நடவடிக்கையை ஒரு மிரட்டல் என தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 19ஆம் திகதி தொடங்கிய முதல் கட்ட போர் நிறுத்தம் எந்த முன்னேற்றமும் இன்றி முடிவுக்கு வந்தது. அடுத்த கட்டம் சில வாரங்களுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும் என்ற போதிலும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை.
இந்நிலையில், முன்மொழியப்பட்ட போர்நிறுத்த நீட்டிப்புக்குப் பிறகு பேச்சுவார்த்தை தோல்வியுற்றால், இஸ்ரேல் மீண்டும் போருக்குத் திரும்பக்கூடும் என்று நெதன்யாகு எச்சரித்துள்ளார்.