வெளிநாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை விமானத்தில் இருந்து இறக்கும் ஏணிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்குள் செயற்படும் பேருந்துகள் மற்றும் விமானங்களை அணுகப் பயன்படுத்தப்படும் ஏணிகள் மிகவும் பழமையானவை பல குற்றச்சாட்டுக்கள் பயணிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் குறித்த ஏணியில் இறங்கும் போது பயணி ஒருவர் தவறி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து விமான நிலைய நிர்வாகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பேருந்துகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய ஏணிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் ஏணிகள் 30 வருடத்திற்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.