எகிப்து(egypt) நாட்டில் 3000 ஆண்டுகள் பழைமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டறியப்பட்டமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எகிப்து நாட்டில் மார்சா ஆலமின் தென்மேற்கே உள்ள ஜபல் சுகாரியில் 4 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கி.மு. 1000 ஆண்டுக்கு முந்தைய தங்கச் சுரங்கத்துடன் தொடர்புடைய தொழிற்துறை மையம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
லாஸ்ட் சிட்டி ஒஃப் கோல்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நகரத்தில் டோலமிக் காலத்தைச் சேர்ந்த பழங்கால நாணயங்கள் உள்பட பல்வேறு வகையான அரிய பழங்காலக் கலைப்பொருள்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.