சிறை செல்ல தயாரான நாமலை ஏமாற்றிய அநுர அரசு

0 1

நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப் புலனாய்வு பிரிவு நிதி மற்றும் வணிகக் குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கான விமானக் கொள்முதல் பரிவர்த்தனையில் இடம்பெற்ற நிதி மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நோக்கில் நாமல் அழைக்கப்பட்டார்.

கடந்த புதன்கிழமை அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் அரச விடுமுறை நாள் என்பதால் தான் கைது செய்யப்படலாம் என நாமல் ராஜபக்ச எதிர்பார்த்திருந்தார்.

தான் கைது செய்யப்பட்டால், அது தனக்கு திருப்புமுனையாக இருக்கும் என நாமல் எதிர்பார்த்திருந்தார். அதன்மூலம் மக்கள் மத்தியில் அனுதாப அலையை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

எனினும் அன்று நாமல் கைது செய்யப்படவில்லை, சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் அளித்த பிறகு வெளியேறியிருந்தார். இது அவரின் அடுத்தகட்டத்திற்கான திட்டத்திற்கான மேலும் ஏமாற்றமாக அமைந்திருந்தது.

அன்றையதினம் நாமல் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் பரபரப்பாக தகவல்கள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.