திரைப்படமாகும் மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு!

0 4

 இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘Thawthisa Pictures’ நிறுவனம் சார்பில் மொஹான் பெரேரா தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்காக இந்திய தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படம் மகிந்த ராஜபக்சவின் அரசியல் பயணத்தையும், இலங்கையின் போர்க்கால நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் குறித்த மூலத் திரைக்கதை பிரதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த திரைப்பட உருவாக்கம் தொடர்பில் மகிந்த ராஜபக்ச தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.