இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள்

0 4

பெண்கள் அமைப்புகள் உட்பட அரசு சாரா நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறு இலங்கையை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்புக்கான ஐக்கிய நாடுகளின் குழு,அதன் அண்மைய அமர்வின் போது, பெலாரஸ், பெலிஸ், கொங்கோ, லிச்சென்ஸ்டீன், லக்சம்பேர்க், நேபாளம் மற்றும்  இலங்கை ஆகிய நாடுகள் தொடர்பில் தனது முடிவுகளை வெளியிட்டது.

இலங்கையைப் பொறுத்தவரை, பாலியல் வன்முறை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையின் அதிக பரவல், ஐந்து பெண்களில் ஒருவர் நெருங்கிய துணையால் உடல் மற்றும்/அல்லது பாலியல் வன்முறை, குறைந்த வழக்குத் தொடுப்பு மற்றும் தண்டனை விகிதங்கள் குறித்து, குறித்த ஐக்கிய நாடுகள் குழு, தமது அதிருப்தியை வெளியிட்டது.

பாலியல் வன்முறை மற்றும் நெருங்கிய துணை வன்முறை குறிப்பாக, சட்டத்தில் குற்றமாக்கப்படவில்லை என்பதையும் அந்த குழு, சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில், பாலியல் வன்முறை உட்பட பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாலின அடிப்படையிலான வன்முறைகளின் குற்றவியல் தன்மை குறித்த பொது விழிப்புணர்வு பிரசாரங்களை இலங்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று குழு அழைப்பு விடுத்துள்ளது.

அனைத்து சூழ்நிலைகளிலும் திருமண பாலியல் வன்முறையை வெளிப்படையாக குற்றமாக்க்கும் வகையில், தண்டனைச் சட்டத்தை திருத்துமாறும், ஐக்கிய நாடுகள் குழு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது.

இதேவேளை, பெண்கள் அமைப்புகள் மற்றும் பெண் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் உள்ளிட்ட அரசு சாரா நிறுவனங்கள் மீது, இலங்கையில் அதிகரித்து வரும் கட்டுப்பாடுகள் குறித்து குழு ஆழ்ந்த கவலை தெரிவித்தது.

குறிப்பாக மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படும் பெண்கள் உரிமை அமைப்புகளின் பணிகளை விகிதாசார ரீதியாகத் தடுக்கும் நிதி கட்டுப்பாடுகள் மற்றும் அதிகாரத்துவத் தடைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் குழு கவலை தெரிவித்தது.

எனவே, பதிவு நடைமுறைகள் வெளிப்படையானவை, பாகுபாடற்றவை மற்றும் அரசாங்க தலையீடு இல்லாதவை என்பதை உறுதிசெய்ய, பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி மற்றும் அரசு சாரா அமைப்புகளின் கட்டாயப் பதிவை கட்டாயப்படுத்தும் தொடர்புடைய உத்தரவை நீக்குமாறு, பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்புக்கான ஐக்கிய நாடுகளின் குழு, இலங்கையைக் கேட்டுக் கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.