மரண பயத்தில் அர்ச்சுனா எம்.பி விடுத்த கோரிக்கை – சபாநாயகரின் உறுதிமொழி

0 0

தமிழர்களுக்கான உயிரை கொடுக்க தயங்கப் போவதிலை என சூளுரைத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்று உயிருக்கு பயந்து பாதுகாப்பு கோரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து தன்மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தினை அடுத்து தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இரண்டு உத்தியோகத்தர்களை பாதுகாப்புக்கு வழங்குமாறு, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போது அர்ச்சுனா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அண்மையில் கொழும்பு நீதிமன்றத்தில் சந்தேக நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த வாரங்களில் பல்வேறு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இவை எனது பாதுகாப்பு தொடர்பான கரிசனையை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.

சந்தேக நபரையும் கைது செய்தனர். எனினும் திடீரென எனக்கு எதிராக வழக்கொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை நாடாளுமன்ற உறுப்பினராக நான் செயற்படுவதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்குதாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் எனக்கு இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஒதுக்குமாறு கோருகின்றேன்.

இந்த வேண்டுகோளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்வதுடன், இந்த அவசர நிலைமையை கருத்தில்கொண்டு உங்களின் சாதகமான பதிலையும் உடனடியாக எதிர்பார்க்கின்றேன் என்றார்.

இதன்போது பதிலளித்த சபாநாயகர், சிறப்புரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுமாயின் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.