தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை அதே படத்தில் நடித்துவரும் மற்றொரு நடிகரான ரவி மோகன் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, மதுரையில் நடைபெற்றுவந்த குறித்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, அடுத்தகட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்துவதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது.
1960களில் தமிழகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது.
குறித்த திரைப்படத்தில் நடிகர்கள் அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.