பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட தங்கங்கள்! ட்ரம்ப்பின் முடிவால் பதற்ற நிலை

0 6

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தல் காரணமாக பல பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தை லண்டனில் இருந்து அமெரிக்க வங்கிகள் வெளியேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா, சீனா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் ஏற்கனவே அதிகப்படியான வரியை விதித்துள்ளார்.

இந்நிலையில், ட்ரம்ப் அடுத்ததாக ஐரோப்பாவை குறிவைக்கக் கூடும் என்ற அச்சத்தினாலேயே அமெரிக்க வங்கிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து, நவம்பர் 5ஆம் திகதி 50 பில்லியன் டொலர்களாக இருந்த அமெரிக்காவின் தங்க இருப்பு, தற்போது 106 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதனால், பிரித்தானியாவில் தங்கத்தின் இருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேலும், ட்ரம்பின் வரி அச்சுறுத்தல் காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலையில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.