ரஷ்ய சிறையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உக்ரைன் பெண் பத்திரிகையாளர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் ஓராண்டுக்கு முன்னர், 27 வயதான உக்ரைனிய பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷ்சினா ரஷிய ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் செய்தி சேகரித்துகொண்டுந்தபோது கடத்தப்பட்டார்.
பல மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பிறகு, அவரின் சிதைக்கப்பட்ட உடல் ஒரு பையில் சமீபத்தில் உக்ரைனுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விக்டோரியா ரோஷ்சினாவின் உடலில் கண்கள், மூளை மற்றும் குரல்வளை ஆகியவை அகற்றப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது அவர் அனுபவித்த சித்திரவதைக்கான ஆதாரங்களை மறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மே 3, உலக பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த சமயத்தில் விக்டோரியா உலகெங்கிலும் அரசு அதிகாரங்களால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பத்திரிகையாளர்களின் சின்னமாக மாறியுள்ளார்.
26 வயது விக்டோரியா அடைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் ‘பிசாசுகளின் அறை’ என்று அழைக்கப்படும் டாகன்ரோக்கில் உள்ள SIZO-2 சிறைச்சாலை, இப்போது சித்திரவதை செய்யும் இடமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறைச்சாலையாக இருந்த இந்த இடம், இப்போது ரஷ்யாவால் உக்ரைனிய கைதிகளை சித்திரவதை செய்யும் கூடமாக மாற்றப்பட்டுள்ளது.