அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) போன்று சிந்தித்தால் அமெரிக்க கண்டங்கள் இரண்டும் ஆசியாவிற்கு வருடாந்தம் கட்டணம் செலுத்த நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஓமானில் நடைபெற்ற 8ஆம் இந்து சமுத்திர மாநாட்டில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தை அண்டிய நிலப்பரப்புகளை ஐரோப்பியர்கள் தேடி மேற்கொண்ட பயணங்களின் போதே, அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மனோநிலையில் சிந்தித்தால் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களிடமிருந்து ஆசியா வருடாந்த கட்டணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய காலணிகளின் காரணமாக இந்து சமுத்திர கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மலினப்படுத்தப்பட்டு விட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.