இலங்கை டிஜிட்டல் சகாப்தத்தை நோக்கி நகர்கின்ற வேளையில் வேர் வரை ஊழல் ஒழிக்கப்படுவதோடு, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட (Budget – 2025) முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் இன முரண்பாடுகள் இனி இல்லை. மதம், இனம், பாலினம் என பிரிவடையும் காரணிகள் இல்லை.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்.
மேலும், வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.