இலங்கையில் விக்கெட்டுக்களை அள்ளிய அவுஸ்திரேலிய பநதுவீச்சாளருக்கு சிக்கல்

19

இலங்கைக்கு(sri lanka) எதிராக அண்மையில் காலியில்(galle) இடம்பெற்ற டெஸ்ட் வெற்றியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலியாவின்(australia) மாட் குஹ்னேமனின்(kuhnemann) பந்துவீச்சு நடவடிக்கை கேள்விக்குரியதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட் ஸ்போர்ட்ஸ்’ செய்தித்தாளின் தகவலின்படி, குஹ்னேமனின் அற்புதமான பந்துவீச்சு நடவடிக்கை கேள்விக்குறியாகியுள்ளது, இதன் காரணமாக அவர் மூன்று வாரங்களுக்குள் கட்டாய பந்துவீச்சு நடவடிக்கை பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

2017 ஆம் ஆண்டு தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து, பந்து வீச்சாளரின் செயற்பாடு ஆராயப்படுவது இதுவே முதல் முறை.

“காலியில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, போட்டி அதிகாரிகள் அவுஸ்திரேலிய அணிக்கு அவரது பந்து வீச்சு குறித்து பரிந்துரை செய்ததாகத் தெரிவித்தனர்.

மேலும் இந்த விடயத்தை சரிசெய்யும் செயல்முறையின் மூலம் அவருக்கு உதவி வழங்கப்படும்” என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Comments are closed.