நாளைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பில் நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 3 மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த நிலையில் உள்ளதன் காரணமாக நாளை முதல் மின்வெட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் நாளைய தினம்(13) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா இல்லையா என்பது குறித்து இன்று (12) பிற்பகல் தீர்மானிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) தெரிவித்துள்ளது.
அத்துடன், நாளைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன, ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை(09) ஏற்பட்ட மின்வெட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
அரச தரப்பு மின்வெட்டுக்கு காரணம் குரங்கு என்றும் பின்னர் நுரைச்சோலையில் ஏற்பட்ட பழுது என தெரிவித்தாலும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துக்கள் மாறுபட்டதாக அமைந்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் (12) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.