யாழ்ப்பாணம் (Jaffna) கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முனக்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் நேற்றைய தினம் (11) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மருத்துவ எரியூட்டியில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதால் அதில் இருந்து கிளம்பும் புகை காரணமாக சுவாசப் பிரச்சினை, தூர் நாற்றம் என்பன ஏற்படுவதால் அயலில் வசிக்கும் தாம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.
இதேவேளை போராட்டக்காரர்களை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeevan Jeyachandramoorthy) குறித்த விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
யாழ் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி காணப்பட்டது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபா நிதி பங்களிப்பில் குறித்த பகுதியில் கடந்த வருடம் எரியூட்டி உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.