ஈ.பி.டி.பி (E.P.D.P) கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் (Kulasingham Thileepa இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவின் (Kerala) கொச்சி என்ற இடத்தில் வைத்து கடந்த திங்கட்கிழமை (10) தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையிலிருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற அவர் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.